ஜெயிலர் 2 படத்தில் வில்லன் யார்.... : எஸ்.ஜே.சூர்யாவா அல்லது செம்பன் வினோத்தா?
ADDED : 248 days ago
2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, விநாயகன், தமன்னா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. அனிருத் இசையமைத்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றன. இதுதவிர கூடுதலாக சில நடிகர்களும் நடிக்க உள்ளனர். அந்தவகையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் செம்பன் வினோத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நெல்சன். இருவரில் யார் வில்லன் வேடத்தில் நடிக்கின்றனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.