உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 3ம் பாகத்தை அறிவித்த மோகன்லால்

திரிஷ்யம் 3ம் பாகத்தை அறிவித்த மோகன்லால்

கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் செய்தார்.

அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 'திரிஷ்யம் 2' கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.

இந்நிலையில் திரிஷ்யம் 3 உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மோகன்லால் அவரின் சமூக வலைதள கணக்கில் திரிஷ்யம் 3ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛கடந்த காலம் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதியாகிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !