உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராபர்' படத்தில் உண்மை சம்பவம்

'ராபர்' படத்தில் உண்மை சம்பவம்

இம்ப்ரஸ் பிலிம்ஸ் மற்றும் மெட்ரோ ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள படம் 'ராபர்'. இப்படத்தின் கதை, திரைக்கதையை 'மெட்ரோ' , 'கோடியில் ஒருவன்' படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் எழுதி உள்ளார். மெட்ரோ படத்தில் நாயகனாக நடித்த சத்யா, இதிலும் நாயகனாக நடித்துள்ளார். தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார். வருகிற மார்ச் 14ஆம் தேதி வெளியாகிறது

எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும் போது உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். பெற்றோர், பெண் குழந்தைகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும். படத்தின் முதல் தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டு உதவினார். தற்போது இந்த படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டு உதவினார். ராபர் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !