மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
223 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
223 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
223 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
223 days ago
2025ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமானது போல உள்ளது. ஆனால், அதற்குள்ளாக இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதி இரண்டு த்ரில்லர் படங்கள் போட்டியில் மோத உள்ளன.
பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'அகத்தியா' படமும், அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்துள்ள 'சப்தம்' படமும் வெளியாக உள்ளன. இரண்டு படங்களுமே த்ரில்லர் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இரண்டு படங்களிலும் ஒரு மர்ம மாளிகை முக்கிய களமாக இருக்கிறது என்பது டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. யார் எந்த அளவுக்கு பயமுறுத்தப் போகிறார்களோ அந்த அளவிற்கு வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
இந்தப் படங்கள் தவிர்த்து 'கூரன், கடைசி தோட்டா' ஆகிய படங்களும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
223 days ago
223 days ago
223 days ago
223 days ago