உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம்

'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'டிராகன்'. இப்படத்திற்கு நேற்று முதல் நாளில் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் நிச்சய வெற்றி பெறும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் சொல்லிவிட்டார்கள். பிரதீப் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லவ் டுடே' படம் போல இந்தப் படமும் 100 கோடி வசூலைப் பெறவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், அடுத்து வெளியாக உள்ள பிரதீப்பின் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி'க்கும் இப்போதே லாபம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விக்னேஷ் சிவன் இயக்கம், அனிருத் இசை, மற்றும் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, மிஷ்கின், சீமான் என அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கெனவே அதிகமாகவே இருந்தது. அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள படத்தின் வியாபாரம் சீக்கிரத்திலேயே முடிந்தாலும் முடிந்துவிடும்.

கதாநாயகனாக 'லவ் டுடே, டிராகன்' என அடுத்தடுத்து வெற்றிகளுடன் முன்னேறி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். 'டிராகன்' படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து அடுத்து சிம்பு நடிக்க உள்ள 51வது படத்தை இயக்கப் போகிறார். 'டிராகன்' வெற்றி சிம்பு 51க்கும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !