கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர்
ADDED : 420 days ago
கடந்த 2022ம் ஆண்டு அசோக் தேஜா என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் ஓடேலா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் ஓடேலா- 2 படத்தில் டீசரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் வெளியிட்டுள்ளார்கள் . அசோக் தேஜா இயக்கி உள்ள இந்த படத்தில் தமன்னாவுடன் ஹெபா பட்டேல், யுவா, நாக மகேஷ், வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். திகில் காட்சிகள் நிறைந்த இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.