ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக்
2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். பின்னர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன் , இந்திரஜித், தேவராட்டம், பத்து தல என பல படங்களில் நடித்தவர், தற்போது கிரிமினல், மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆர்யாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவுதம் கார்த்திக்கின் பெயர் கவுதம் ராம் கார்த்திக் என்று இடம் பெற்றுள்ளது.
சமீபத்தில்தான் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருந்தார். இந்த நிலையில் தற்போது கவுதம் கார்த்திக்கும் தனது பெயரை மாற்றியுள்ளார். மேலும், ஆர்யா, சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். இவர் விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் என்ற படத்தை இயக்கியவர்.