ரூ.50 கோடி வசூலைக் கடந்த 'டிராகன்'
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிராகன்'. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் 50 கோடியைக் கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 24.9 கோடியும், ஆந்திரா, தெலுங்கானாவில் 6.25 கோடியும், கேரளா, கர்நாடகா, வட இந்தியாவில் 4.37 கோடியும், வெளிநாடுகளில் 14.7 கோடியும் என 3 நாட்களில் மொத்தம் ரூ.50.22 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் ரசிகர்கள் அனைவருக்கும் படம் பிடித்திருப்பதாலும், கல்லூரிக் கதை என்பதாலும் ரிபீட் ஆடியன்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என நம்புகிறார்கள்.
இந்த வாரம் முழுவதும் கூட இப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாகவே இருக்கும் என தெரிவிக்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் இப்படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டிற்கான முதல் பெரிய லாபகரமான படமாக இப்படம் அமையலாம்.