மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
217 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
217 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான காதல் படமாக அமைந்தது.
மீண்டும் ரீரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றோடு இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விடிவி கணேஷுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், திரிஷா, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
வீடியோவின் முடிவில் சிம்புவின் இதயத்தைத் தொட்டு 'இங்க என்ன சொல்லுது, ஜெஸி ஜெஸி சொல்லுதா' என விடிவி கேட்க, அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸி ஜெஸி சொல்லல, வேற சொல்லுது, அப்புறம் சொல்றன் வா,” என பதிலளித்து வீடியோவை முடித்துள்ளார்.
இப்போது யாரையாவது காதலிக்கிறாரா சிம்பு ?.
217 days ago
217 days ago