உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் 9 படங்கள் ரிலீஸ் ஆகும் வாரம்…

மீண்டும் 9 படங்கள் ரிலீஸ் ஆகும் வாரம்…


2025ம் ஆண்டின் இரண்டு மாத முடிவில் 45 படங்கள் வரை தியேட்டர்களில் வெளியாகின. அவற்றில் மூன்று படங்கள் மட்டுமே லாபரகமான படங்களாக அமைந்தது. வாராவாரம் சராசரியாக நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியான வாரமாக பிப்ரவரி 14ம் தேதி அமைந்தது. அன்றைய தினம் 9 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று கூட வெற்றிகரமான ஓடவில்லை, விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. ஒரே நாளில் அத்தனை படங்கள் வெளிவந்தால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும். மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என திரையுலகில் உள்ளவர்களே சொன்னார்கள். ஆனால், அதெல்லாம் எந்த தயாரிப்பாளர் சங்கம் காதிலும், வினியோகஸ்தர்கள் சங்க காதிலும் விழவில்லை போலிருக்கிறது.

மீண்டும் அது போன்ற ஒரு வாரமாக இந்த வாரம் அமையப் போகிறது. இந்த வாரம் மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று 9 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

“அம்பி, அஸ்திரம், படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' என 9 படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன. அவற்றில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் மட்டும்தான் நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக வெளியாகிறது. அப்படங்கள் வெளிவந்த பிறகுதான் அவற்றின் வரவேற்பு பற்றி சொல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !