'சிக்கந்தர்' ரீமேக் படம் இல்லை: ஏஆர் முருகதாஸ்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'.
இப்படத்தின் டீசரைப் பார்த்த பலரும் இப்படம் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழ்ப் படமான 'சர்க்கார்' படத்தின் ரீமேக் என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இது எந்தப் படத்தின் ரீமேக்கும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். 'அனிமல், ச்சாவா' படங்களுக்குப் பிறகு அவருக்கு இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளாராம் ராஷ்மிகா.
2016ல் முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'அகிரா' படம் படுதோல்வியைத் தழுவியது. ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு வரும் 'சிக்கந்தர்' படம் சிறப்பான வெற்றியைப் பெறுமா என பாலிவுட்டினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.