மேலும் செய்திகள்
2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா
191 days ago
எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில்
191 days ago
25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி'
191 days ago
தமிழில் கடைசியாக சசிகுமாருடன் இணைந்து 'உடன்பிறப்பே' என்ற படத்தில் நடித்திருந்தார் ஜோதிகா. அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்றவர், 'சைத்தான், ஸ்ரீகாந்த்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது 'டப்பா கார்டெல்' என்று வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஜோதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் அதிகமாக வருகிறது. பெரும்பாலும் நடிகைகளை கிளாமராக நடிக்க வைப்பது, பாடல்களுக்கு நடனமாட மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இன்னும் சில படங்களில் ஆண்களை புகழ்ந்து பேசுவதற்கும் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எனக்கு அதுபோன்ற வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால் தான் எனக்கு பிடித்தமான கதையின் நாயகியாக சில கதைகளை தேர்வு செய்து நடித்தேன். எதிர்காலத்திலும் எனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிப்பேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.
191 days ago
191 days ago
191 days ago