பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன்
ADDED : 254 days ago
ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இது அல்லாமல் அதர்வாவை வைத்து 'இதயம் முரளி' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
தற்போது ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, பராசக்தி பீரியட் படமாக உருவாகி வருகிறது. ஆனாலும் இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் கதையாக அமைந்துள்ளது. சுதா கொங்கரா, மணிரத்னம் ஸ்கூலில் இருந்து வந்ததால் படப்பிடிப்பை வேகமாக கொண்டு செல்கிறார். சிவாவின் உழைப்பு வியக்க வைத்தது. எங்கள் நிறுவனத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.