உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு பிப்ரவரி 15ம் தேதி, சென்னை வடபழனி மியூசிக் யூனியன் வளாகத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தர்வீஷ் தேர்தல் அதிகாரியாக தேர்தலை நடத்துகிறார். இந்த சங்கத்தை பொறுத்தவரையில் 1,800 பேர் ஓட்டு அளிக்க தகுதியானவர்கள். பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் நடந்தாலும், முக்கியமான பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தலைவராக ஆர்.கே.செல்வமணி, செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோரும், துணைத்தலைவராக கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 5 இணைச்செயலாளர், 17 செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !