உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பராசக்தி வெற்றி படமா?

பராசக்தி வெற்றி படமா?


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம், ஒரு மாதத்துக்குள் ஓடிடியில் வெளியாகிவிட்டது. உண்மையில் இந்த படம் வெற்றி படமா என்று விசாரித்தால் படத்தின் பட்ஜெட், நடிகர், நடிகைகள் சம்பளம், வரவு, செலவு, வியாபாரம், தியேட்டர் வசூல் ஆகியவை தயாரிப்பாளர் தரப்புக்கு மட்டுமே தெரியும். படத்தில் நடித்த பலருக்கும் கூட அது தெரிய வாய்ப்பில்லை.

தமிழ், தெலுங்கில் ரிலீஸ். பல மொழிகளில் ஓடிடி, சாடிலைட்ஸ் ரைட்ஸ், மியூசிக் ரைட்ஸ், மற்ற வியாபாரத்தை கணக்கிட்டால் படம் பெரியளவில் நஷ்டமாகி இருக்க வாய்ப்பு இல்லை. தியேட்டர் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டது. ஆகவே, படம் எந்த அளவுக்கு லாபம் அல்லது எந்த அளவுக்கு நஷ்டம் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். படக்குழுவை பொறுத்தரையில் சில விமர்சனங்கள் வந்தாலும் பராசக்தியை வெற்றி படமாகவே சொல்கிறார்கள். படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரனுக்கும் பண விஷயத்தில் பிரச்னை இல்லை என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

அசோகா அசோகா
2026-02-10 10:16:18

மொக்க படம்


Loganathan Balakrishnan, Salem
2026-02-09 17:14:22

எதோ அவங்க பாக்கெட்ல இருந்து எடுத்து போட்டு தயாரித்த படமா எல்லாம் ௧௦ ரூபாய் மக்கள் பணம் லாபமா இருந்த என்ன நஷ்டமா இருந்த யார் கவலை பட போறாங்க