உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார்

சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார்

மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, பிக்பாஸ் தாமரை நடிக்கும் ஆழி படம், பிப்ரவரி 27ல் ரிலீஸ். படம் குறித்து சரத்குமார் கூறியது ''கடலை மையப்படுத்தி இந்த கதை உருவாகி உள்ளது. கடலில் ஒரு நவீன படகில் பெரும்பாலான காட்சிகள் நடக்கின்றன. இந்த கதையை சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். எப்படி இதை எடுப்பார்கள் என்று யோசித்தேன். பெரிய போட்டை செட் போட்டும், கடலிலும் எடுத்தார்கள். தேவிகா சதீஷ் அப்பாவாக வருகிறேன். அவர் சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அவரை அடுத்து ஆக் ஷன் படங்களுக்கு இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பிக்பாஸ் தாமரை முக்கியமான வேடத்தில் வருகிறார்.

முழுக்க, முழுக்க ஒரு கோர்ட் ரூமில் நடக்கும் மேல் விலாசம் என்ற படத்தை இயக்கியவர் இந்த இயக்குனர். அதில் பார்த்திபன் நடித்து இருந்தார். அந்த படம் மாதிரியே இந்த படமும் வித்தியாசமாக இருக்கும். இப்போதுள்ள பார்வையாளர்கள் மாறுபட்ட கதைகளை ரசிக்கிறார்கள். இப்போது பார்க்க ஏகப்பட்ட கன்டன்ட் வந்துவிட்டது. செல்போன் ஷார்ட்ஸ் பார்ப்பது அதிகமாகிவிட்டது.

சினிமா, ஓடிடி, டிவி, ஷார்ட், ரீல்ஸ் என எதில் நடிப்பது என பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது. என்னை பொறுத்தவரையில் எல்லாமே நடிப்பு தான். காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என நினைக்கிறேன். இப்போது வியாபார சூழல் மாறிவிட்டது. ஓடிடியில் விற்கப்பட்ட பின்னரே பல படங்கள் தியேட்டரில் ரிலீஸ் தேதி அறிவிக்கின்றன. ஒரு படம் தியேட்டரில் வெளியான 1 மாதம் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பது என் கருத்து.

ஆழி படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்து இருக்கிறார். கொச்சி அருகே உள்ள கடல்பகுதிகளுக்கு ஒரு டீமுடன் சென்று ஒலிப்பதிவு செய்த அவரின் ஈடுபாட்டை பாராட்ட வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !