உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்'

3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்'

டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்தவாரம் வெளியான படம் ‛வித்லவ்'. அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். புதியவர் மதன் இயக்கி உள்ளார். காதல் கதையில் இன்றைய இளைஞர்களை கவரும் படமாக வெளியாகி உள்ளதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கும் பாசிடிவ்வான விமர்சனங்களும் வந்துள்ளன. அதனால் வசூலும் நன்றாக உள்ளது.

கடந்த மூன்று நாட்களில் இப்படம் 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா, ஜீயான் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். டூரிஸ் பேமிலி அளுவுக்கு இல்லாவிட்டாலும் இந்த படமும் குறிப்பிடத்தக்க நல்ல லாபத்தை தரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !