'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்?
ADDED : 254 days ago
நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் ரவி மோகன் 'கராத்தே பாபு' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது அடுத்த படத்திற்கான கதை கேட்பதில் ரவி மோகன் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 'அவள், நெற்றிக்கண்' போன்ற படங்களை இயக்கிய மிலிந்த் ராவ், ரவி மோகனை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்கிறார்கள்.