உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரெட்ரோ' - சொந்தக் குரலில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே

'ரெட்ரோ' - சொந்தக் குரலில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே


.தமிழில் அறிமுகமானாலும், அதன் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

தற்போது சூர்யா ஜோடியாக 'ரெட்ரோ' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மே 1ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பூஜா அவரது சொந்தக் குரலில் பேசியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து காமிக்ஸ் வடிவிலான சில போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளார்கள்.

பூஜா இதுவரை எந்த ஒரு பிராந்திய மொழிப் படத்திலும் அவரது சொந்தக் குரலில் பேசியதில்லையாம். முதல் முறையாக தமிழில் அவர் டப்பிங் பேசியுள்ளார். இப்படத்தில் தமிழில் பேசி நடிக்க ஆரம்பத்திலிருந்தே பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் பூஜா. அவருக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமையும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !