உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 14ல் 'கூலி' டீசர்?: அந்த நாளில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மார்ச் 14ல் 'கூலி' டீசர்?: அந்த நாளில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. இப்படத்தின் டீசர் ஹோலி தினமான மார்ச் 14ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் மற்றும் சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை பாலசந்தர் சூட்டிய நாள் என்பதாலும் பொருத்தமான நாளாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

'கூலி' படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோவே ரஜினி ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்தது. அடுத்து டீசர் வெளியீடு என்றால் அந்த எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. லோகேஷ், ரஜினி முதல் முறையாக இணைந்துள்ள படம் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த 'வேட்டையன்' படம் சரியான வரவேற்பையும், வசூலையும் பெறாமல் போனது. அதனால், 'கூலி' வெற்றியை அவர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் குவித்தது. 'கூலி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி என்று தடம் பதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !