மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
203 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
203 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
203 days ago
தமிழ் சினிமா உலகில் முக்கியமான இயக்குனர்களில் பாலா, வெற்றிமாறன் போன்றவர்கள் உள்ளனர். மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகப் பதிவு செய்வதில் பாராட்டு பெற்றவர்கள். ஆனால், இருவருமே ஒரு படத்தை எடுத்து முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் உண்டு.
ஒரு படத்தின் உருவாக்கத்தில் முக்கியமானது 'பவுண்டட் ஸ்கிரிப்ட்'. அதாவது படத்தின் திரைக்கதை, வசனம், காட்சி அமைப்பு, பிரிப்பு என அனைத்தும் அடங்கிய தொகுப்புக்குத்தான் அந்தப் பெயர். அது சரியாக இருந்தால் படப்பிடிப்பை நடத்துவது எளிது. நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்குமே அதை பாலோ செய்வது எளிது.
பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த 'வணங்கான்' படத்தின் 'பவுண்டட் ஸ்கிரிப்ட்' வேண்டும் என்று சூர்யா கேட்டதால் அப்படமே டிராப் ஆனது. பின்னர், அருண் விஜய்யை வைத்து படத்தை எடுத்து முடித்தார். படம் எப்படி இருந்தது என்பது பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.
அது போலவே தற்போது வெற்றிமாறனிடம் 'வாடிவாசல்' படத்திற்கான 'பவுண்டட் ஸ்கிரிப்ட்'டைக் கேட்டிருக்கிறாராம் சூர்யா. ஆனால், இதுவரை அதை வெற்றிமாறன் தயார் செய்து தரவில்லையாம். அது வந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்பதில் சூர்யா உறுதியாக இருப்பதாகத் தகவல். அது தாமதமாகவே தான் அதற்கிடையில் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
பாலாவைப் போல அந்த ஸ்கிரிட்டைத் தராமல் படத்தையே டிராப் செய்வாரா வெற்றிமாறன், அல்லது தந்துவிட்டு படத்தைத் தொடர்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும் என்பது கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு.
203 days ago
203 days ago
203 days ago