மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
203 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
203 days ago
1980களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே ரங்கராஜ். 1983ம் ஆண்டு மோகன், ராதா, பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'நெஞ்சமெல்லாம் நீயே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
அதன் பின் 'உன்னை நான் சந்தித்தேன், உதய கீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நினைவே ஒரு சங்கீதம்” உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். கடைசியாக 1992ல் வெளிவந்த 'எல்லைச்சாமி' என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் சரத்குமார், ரூபிணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
33 வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த், பூஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தனை வருட இடைவெளியில் வேறு யாரும் படம் இயக்க மீண்டும் வந்திருக்க முடியாது.
203 days ago
203 days ago