'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ்
ADDED : 244 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சாம் சிஎஸ். 'கைதி, விக்ரம் வேதா' படங்களின் வெற்றிக்குப் பிறகு அவருக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர்.
கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்கும் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தின் டைட்டில் கார்டில் மட்டுமே அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவருக்குரிய முக்கியத்துவத்தை பட புரமோஷன்களில் படக்குழு அளிக்கவில்லை.
இதனிடையே, அப்படத்தை அடுத்து 'ஜாக்' என்ற தெலுங்குப் படத்தில் பின்னணி இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்கத்தில் சித்து ஜொன்னலகட்டா நடிக்கும் படம் அது. தமிழிலிருந்து தெலுங்கிற்குச் சென்று இசையமைப்பவர்களில் அனிருத், சாம் சிஎஸ், ஜிவி பிரகாஷ் ஆகியோர் குறிப்பிடும் அளவில் உள்ளனர்.