உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம்

ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம்

நவீன கண்டுபிடிப்பான ஏஐ தொழில்நுட்பம் பொழுபோக்குத் துறையில் குறிப்பாக சினிமா துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த பாடகர் குரலில் பாடல்களையும், மறைந்த நடிகர்கள் தோற்றங்களையும் 'ஏஐ' தொழில் நுட்பத்தில் படங்களில் கொண்டு வருகிறார்கள். விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐயில் நடிக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நடிகர், நடிகைகள் இன்றி அவர்களின் தோற்றத்தை மட்டும் வைத்து படம் வெளிவரும் என்கிறார்கள். குறிப்பாக ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை அழைத்து படத்திற்கு தேவையான மேக்அப் போட்டு அவரை அனைத்து கோணங்களிலும் புகைப்படம் எடுத்தால் போதும் அவர் நடிக்காமலே அந்த படத்தை உருவாக்க முடியும்.

இதை சாத்தியப்படுத்துவது போன்று தற்போது ஹிந்தியில் நைசா என்ற படம் தயாராகி வருகிறது. விவேக் அஞ்சலியா இயக்கி உள்ளார். காதல் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. ஏஐயில் உருவாக்கிய நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மற்றும் அவர்கள் பேசும் வசனங்கள் படத்தில் இடம்பெறுகிறது. ரயில், விமானம், மலை, அருவி, நகரம், கட்டிடங்களும் ஏஐயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் வெற்றி பெற்றால் இனி நடிகர், நடிகைகள் இல்லாமலே படங்கள் வெளிவரத் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !