கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!
ADDED : 272 days ago
'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன், நாகார்ஜுனா, சத்யராஜ். உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அமீர்கான், பூஜா ஹெக்டே இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று கூலி படபிடிப்பு தளத்தில் தன்னுடைய 39வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. மேலும் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் கூலி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.