உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி'

தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி'


விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‛குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. ‛புஷ்பா -2' படத்தை அடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தை 500 கோடி வசூல் பட பட்டியலில் இணைத்து விட வேண்டும் என்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

குறிப்பாக இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமே 1000 தியேட்டர்களில் வெளியிடுவதோடு, உலக அளவிலும் அஜித்தின் முந்தைய படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டரில் வெளியிட்ட போகிறார்களாம். மேலும், இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் டிரைலர் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. முதல் பாடல், 18ம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !