இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார்
ADDED : 207 days ago
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த இளையராஜா அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா, இசையமைப்பாளராக அறிமுகமான ‛அன்னக்கிளி' படத்தின் நாயகனான பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்கச்சங்கிலியும் அணிவித்து கவுரவப்படுத்தினார். அவருடன் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா, மகளும், பாடகியுமான பிருந்தாவும் உடன் சென்று வாழ்த்தினர்.