உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பிறந்தநாளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சிம்பொனி இசை அரங்கேற்றி சாதித்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜுன் 2ல் அவரின் பிறந்தநாளில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முன்னதாக இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி இருந்த முதல்வர் ஸ்டாலின், ‛‛இளையராஜாவின் சிம்பொனி இசை சாதனை, அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணம் ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் விழா நடத்தப்படும்'' என அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஜுன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாள். அந்த நாளிலேயே அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 27) அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !