திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா!
ADDED : 192 days ago
‛நாடோடிகள், ஏழாம் அறிவு, வீரம், மார்க் ஆண்டனி' என பல படங்களில் நடித்தவர் அபிநயா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில், தனது நீண்ட கால காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருந்தார். ஆனால் நடிகர் விஷாலும் அபிநயாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. அந்த செய்தியை மறுத்திருந்தார் அபிநயா.
இந்த நிலையில் தற்போது அபிநயாவுக்கும், வெகுசனா கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அது குறித்து புகைப்படங்களை இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். விரைவில் தனது திருமண தேதியை அபிநயா அறிவிப்பார் என்று தெரிகிறது.