சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் இணைந்த பாப்ரி கோஸ்!
ADDED : 200 days ago
‛அமரன்' படத்தை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ‛மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 1965களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பிரித்திவி ராஜ், குரு சோமசுந்தரம், பஷில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது பாப்ரி கோஸும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ‛பைரவா', அஜித்தின் ‛விஸ்வாசம்' போன்ற படங்களில் நடித்தவர். சிவகார்த்திகேயனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பாப்ரி கோஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.