ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர்
ADDED : 193 days ago
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, அதன்பின் நடிகர் ஆனார். தொடர்ந்து 2014ம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். பிறகு நட்பே துணை, நான் சிரித்தால், பிடி சார், கடைசி உலகப் போர் என பல படங்களில் நடித்தார். தற்போது ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார். இவர், ரியோ நடித்த ஜோ என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மாறா படத்தை தயாரித்த பிரமோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.