உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா

குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்., 10-ந்தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் முதல் காட்சி எப்போது போடப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

அதிகாலை காட்சிகள் இப்போது போடப்படாத நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் காலை 9 மணி முதல் காட்சிகள் துவங்கப்படும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.

அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் சுமார் 900 அரங்குகள் வரை வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் இன்னொரு சிறப்பு காட்சி போடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !