உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம்

துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. ரித்து வர்மா, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தாண்டு எப்படியும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வீர தீர சூரன் படத்திற்காக தியேட்டர்களில் விசிட் அடித்து வரும் விக்ரமிடம் ரசிகர் ஒருவர் துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியாகும் என கேட்டார். அதற்கு அவர், ‛‛அந்த படத்திற்காக நானும் காத்திருக்கிறேன், கவுதமிடம் கேட்டு ரிலீஸ் தேதியை சொல்கிறேன்'' என்றார்.

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள ‛வீர தீர சூரன்' படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரமிற்கு வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !