ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன்
ADDED : 190 days ago
விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுருக்கிறது. ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 38 கோடி வரை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரமும் பல திரையரங்களில் இன்னும் நல்ல வசூல் வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் விக்ரம், வீர தீர சூரன் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும், அந்த பாகத்தையும் இதே நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.