உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள்

பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள்


2025ம் ஆண்டின் காலாண்டு முடிந்துவிட்டது. சுமார் 60க்கும் மேற்பட்ட படங்கள் கடந்த காலாண்டில் வெளிவந்தன. அவற்றில் வெற்றி என்பது ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பது வருத்தமான தகவல். எஞ்சிய மாதங்களின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று குறிப்பிடும்படியான பிரபலமான படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

“க.மு.க.பி, S/o காளிங்கராயன், இஎம்ஐ, தரைப்படை” ஆகிய நான்கு தமிழ் படங்கள் மட்டுமே இன்று வெளியாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான 'வீர தீர சூரன் 2' இரண்டாவது வாரத்தில் தொடர்கிறது.

அடுத்த வாரம் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வெளிவருவதால் இந்த வாரம் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்து ஏப்ரல் 18ம் தேதி சிபிராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்', அதற்கடுத்து எப்ரல் 24ம் தேதி சுந்தர் சி, வடிவேலு நடித்துள்ள 'கேங்கர்ஸ்' படங்கள் வெளியாக உள்ளன. இந்த மாத வெளியீடுகளில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !