மேலும் செய்திகள்
பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா
160 days ago
விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா
160 days ago
பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன்
160 days ago
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலருக்கு தானாக முன்வந்து செய்த உதவியால் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவர். கடந்த மார்ச் 23ம் தேதி இவரது மனைவி மற்றும் அவரது சகோதரி இருவரும் நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்தபோது விபத்துக்கு உள்ளானது. கார் மிகப்பெரிய அளவில் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சோனு சூட்டின் மனைவி, அவரது சகோதரி மற்றும் ஓட்டுனர் ஆகியோர் தற்போது நலமுடன் இருப்பதாக சோனு சூட் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் காரில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சில நாட்களுக்கு முன்பு என் மனைவி மற்றும் அவரது சகோதரி பயணித்த கார் மிகப்பெரிய விபத்துக்கு உள்ளானது. அதிலிருந்து அவர்களை காப்பாற்றியது எது தெரியுமா? அவர்கள் அணிந்திருந்த சீட் பெல்ட் தான். இத்தனைக்கும் என் மனைவி பின் சீட்டில் அமர்ந்திருந்த தனது சகோதரியிடம் சீட் பெல்ட் போடு என்று கூறியுள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அவரும் சீட் பெல்ட் அணிந்து கொண்டார். அதற்கு பின் வந்த நிமிடங்களில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. ஆனால் அப்படி சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் தான் இவர்கள் அனைவருமே உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பினர்.
நிறைய பேர் குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட் என்பதை ஏதோ கடமைக்காகவும் போலீஸ் இடம் இருந்து தப்பிப்பதற்காகவும் தான் அணிகிறார்கள். அப்படி இருக்கையில் பின் சீட்டில் இருப்பவர்கள் சீட் பெல்ட்டை கண்டு கொள்வதே இல்லை. ஆனால் பின் சீட்டில் அமர்ந்தவர்களும் கூட சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் உயிரை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடியது” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் சோனு சூட்.
160 days ago
160 days ago
160 days ago