மேலும் செய்திகள்
தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது
150 days ago
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
150 days ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
150 days ago
'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல் வந்துள்ளது. தனது ரசிகர்களுக்குப் பிடித்த விதத்தில் ஒரு ரசிகரின் பார்வையில் இந்தப் படத்தை ஆதிக் இயக்கியுள்ளதாக பாராட்டி இருக்கிறார் அஜித். அதனால், மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க உள்ளார் என்பது உறுதி என்கிறார்கள்.
2026 தீபாவளிக்கு அந்தப் படம் வெளிவரும் வகையில் உருவாக உள்ளதாம். அடுத்த சில மாதங்களுக்கு அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதில் பிஸியாக இருப்பதால் வருடக் கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் சொல்கிறேன் என ஆதிக்கிடம் அவர் சொன்னதாகத் தகவல்.
'குட் பேட் அக்லி' படத்தின் முடிவில் அஜித்தை தான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை 'மேக்கிங் வீடியோ' மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆதிக். அதில் அஜித்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார், அவரது கைகளைத் தொட்டு முத்தமிடுகிறார். இப்படியெல்லாம் செய்தால் அடுத்த வாய்ப்பு என்ன அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வழங்கலாமே.
சரண், 'சிறுத்தை' சிவா, எச்.வினோத் ஆகிய இயக்குனர்கள் போல அடுத்த சில படங்களுக்கு அஜித்துடன் ஆதிக் பயணித்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
150 days ago
150 days ago
150 days ago