அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ?
ADDED : 258 days ago
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஹீரோ, வில்லன் என நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், கைதி, அநீதி, ரசவாதி போன்ற சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்ததுள்ளது.
இதையடுத்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜூ உடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். மமிதா பைஜூவிற்கு இப்போது நிறைய படத்தில் இருந்து ஆபர் வருவதால் இந்த படத்தை ஒப்புக்கொள்வாரா என்பது விரைவில் தெரிய வரும்.