மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
142 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
142 days ago
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகத்தை போதை பொருள் குற்றச்சாட்டு ஆக்கிரமித்துள்ளது. கோழிக்கோட்டில் கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரில் பெண் ஒருவர் மலையாள நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதைப்பொருள் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஷைன் டான் சாக்கோ படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் நடிகர் சங்கத்தில் அளித்த புகாரை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் போலீசார் அவரை விசாரணைக்காக தேடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது அவரை வைத்து 'நமக்கு கோடதியில் காணாம்' என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஹசீப் மலபார் என்பவர் படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “என்னுடைய படப்பிடிப்பு கோழிக்கோட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் நான் தொடுபுழாவில் இருந்தேன். நள்ளிரவு 3 மணி அளவில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி தனக்கு புகைப்பதற்கு கஞ்சா வேண்டும் என்று கேட்பதாக எனக்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து தகவல் வந்தது. அது கிடைத்தால் தான் மறுநாள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தன்னால் நல்ல மூடுடன் நடிக்க முடியும் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதாகவும் இல்லை என்றால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் ஏற்படும் என்றும் தயாரிப்பு நிர்வாகி மூலம் எனக்கு சொல்லப்பட்டது.
எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. அதேசமயம் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே அந்த பொருள் கிடைத்ததால் அங்கேயே பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன். படப்பிடிப்பிற்காக கொண்டு வரப்பட்ட கேரவனை ஸ்ரீநாத் பாஷி இப்படி போதைப்பொருளை புகைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினார். வேறு யாரையும் அந்த கேரவனுக்குள் நுழைய விடவில்லை. அந்த சமயத்தில் இது குறித்த தகவலை நான் வெளியிட்டு இருந்தால் போலீசார் அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட படத்தில் பல கோடிகளை முதலீடு செய்திருந்தால் அதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
அதனால் வேறு வழியின்றி அவரது செயலை கண்டும் காணாதது போல் போக வேண்டி இருந்தது. இப்போதும் பல தயாரிப்பாளர்கள் இதேபோலத்தான் சில நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தி விட்டு அவர் பின்னால் கால்ஷீட் கேட்டு அலைந்து கொண்டிருப்பதையும் நான் பார்க்கிறேன். இவர்களைப் போன்ற சிலரால் தான் மலையாள சினிமாவிற்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஹசீப் மலபார்.
142 days ago
142 days ago