எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி
ஓகே கண்மணி, நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பவித்ரா லட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட உடல் அலர்ஜியால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது.
இதற்கு பவித்ரா லட்சுமி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. அதேபோல் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. சமூக ஊடகங்களில் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களது பொழுது போக்கிற்காக என்னுடைய வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது. இது போன்ற வதந்திகளை பரப்பி அதை நீங்கள் கடினமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பவித்ரா லட்சுமி.