மேலும் செய்திகள்
மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர்
154 days ago
புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக்
154 days ago
ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ்
154 days ago
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா இசையமைத்த ‛ஒத்த ரூவாய் தாரேன்', 'இளமை இதோ இதோ', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா, பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாகவும், அதற்காக அவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளதாகவும் குட் பேட் அக்லி தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கூறியதாவது: கதை எழுதும் கதை ஆசிரியருக்கு அந்தக் கதை எத்தனை மொழிக்குச் சென்றாலும், அதில் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பாட்டிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. காரணம் என்னவென்றால் அது தனி படைப்பு. என்னுடைய அண்ணன் எந்த படமானாலும், அதனுடைய இசை உரிமையை வாங்கிக் கொள்வார். இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி மேடையில் பாடுவதற்கு அவர் தடை கேட்ட நிலையில், அது குறித்து நான் அவரிடம் மிகவும் சண்டை போட்டேன். அதன் பின்னர் அவர் மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு தடை போடவில்லை.
நீங்கள் ஏழு கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவன் போட்ட பாட்டிற்கு கைதட்டு வராமல் எங்களது பாட்டிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா.. எங்களுடைய பெயரை போடாமல் இன்னொரு மியூசிக் டைரக்டருக்கு அவ்வளவு கோடிகள் கொடுத்தும், அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை. அப்படியானால் அதில் எங்களுக்கும் பங்கு இருக்கும் அல்லவா? நீங்கள் எங்களிடம் அனுமதி கேட்டால் நிச்சயமாக இளையராஜா இலவசமாகவே கொடுத்து விடுவார். அவரிடம் அனுமதி வாங்காமல் போட்டதால்தான் அவருக்கு கோபம் வருகிறது. அதனால்தான் அவர் சண்டையிடுகிறார். இதில் இளையராஜாவுக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது; எங்களிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது.
அது அஜித் படம் என்றெல்லாம் சொல்கிறார்கள்; அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அது எங்களுடைய பாட்டு அவ்வளவுதான். உன்னுடைய மியூசிக் டைரக்டரால் அப்படியான இசையை கொடுக்க முடியவில்லை; எங்களுடைய பாடல்கள் தான் படத்தை ஜெயிக்க வைக்கிறது. அதற்கு நீங்கள் முன்பே அனுமதி வாங்கி இருந்தால், நாங்கள் சந்தோஷமாக அதனை கொடுத்திருப்போம். என்னுடைய அனுமதி இல்லாமல் உன்னுடைய சொத்தை எப்படி நீ பயன்படுத்தலாம். அந்தக் கோபம் தானே தவிர, அது வேறொன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
154 days ago
154 days ago
154 days ago