மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
163 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
163 days ago
'பாகுபலி' நடிகரான ராணா டகுபட்டி தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 'ராணா நாயுடு சீசன் 2' என்ற தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறது நெட்பிளிக்ஸ்.
அதில் ஒன்றாக அமெரிக்காவில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த WWE-ன் முதன்மையான நிகழ்வான 'ரெஸில்மேனியா 41'க்கு முன் வரிசையில் அமர்வதற்கான அழைப்பைப் பெற்றிருந்தார் ராணா. இந்திய அளவில் அந்தப் பெருமையைப் பெற்ற முதல் பிரபலம் ராணா தான்.
உலக அளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த நிகழ்வை எண்ணற்ற ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் தொடரையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முயற்சித்துள்ளார்கள்.
'ராணா நாயுடு சீசன் 2' தொடரில் ராணாவின் சித்தப்பா நடிகர் வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரண் அன்ஷுமான் இத்தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் ராம்பால் வில்லனாக நடித்துள்ளார். அமெரிக்க சீரிஸ் ஆன 'ரே டோனாவன்' தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர்தான் 'ராணா நாயுடு சீசன் 2'.
163 days ago
163 days ago