உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது?

கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது?


கணேஷ் பாபு எழுதி இயக்கி கவின், அபர்ணா தாஸ் நடித்து திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'டாடா'. இந்த திரைப்படம் 2023ம் ஆண்டு வெளியானது. பின்னர் சில நாட்கள் கழித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. ஒரு வருட கால அவகாச அடிப்படையில் மட்டுமே இப்படத்தை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை.

அமேசான் நிறுவனத்தில் வெளியாகும்போது, நல்ல பார்வையாளர்கள் கிடைத்தது. அப்படி இருந்தும் ஏன் இன்னும் வேறு எந்த ஓடிடி தளத்திற்கும் நகராமல் இருப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !