உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான்

திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான்

கூக்கி குலாட்டி மற்றும் ராபி குரோவால் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛ஜூவல் தீப் - தி ஹீஸ்ட் பிகின்ஸ்'. சைப் அலிகான், ஜெய்தீப் அஹ்லாவத், நிகிதா தத்தா மற்றும் குணால் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். திருட்டு தொடர்பான ஆக் ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் சாகச மனப்பான்மை மற்றும் குடும்பத்தின் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட அழகான முரடனாக ரெஹான் ராயாக சைப் நடித்துள்ளார். இந்த படம் இன்று(ஏப்., 25) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

சைப் அலிகான் கூறுகையில், ‛‛திருட்டு தொடர்பான படத்தில் திருடனாக நடித்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் இதில் எனது கேரக்டர் சவால்கள் நிறைந்தது. அவனுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. சாகசக்காரனாகவும், குடும்ப தலைவனாகவும் நடித்துள்ளேன். ஹீரோவை இந்த மாதிரி வேடத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இதுபோன்ற வாய்ப்புகள் எப்பவும் வராது. துப்பாக்கிகளுடன் கூடிய மாபியா டான்கள், சிவப்பு வைரங்களின் உலகம், அருங்காட்சியங்களை கொள்ளை அடிப்பது என சாகசமும், அதிரடியும் நிரம்பி இருக்கும். படத்தில் எனது ரெஹானின் கதாபாத்திரம் அருமையானது. படப்பிடிப்பு தளத்திலும் மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !