நேருக்கு நேர் மோதும் கமல், சிம்பு!
ADDED : 158 days ago
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவான திரைப்படம் 'தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற ஜூன் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கமல், சிம்பு அப்பா, மகன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது கிடைத்த புதிய தகவலின் படி இதில் கமல், சிம்பு இருவரும் நேருக்கு நேர் சட்டையை பிடித்து சண்டை போடுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது.