மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ்
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன், ‛சகாப்தம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‛மதுரை வீரன்' படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடித்து முடித்துள்ள படம் ‛படை தலைவன்'. முக்கிய வேடத்தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். ஏஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர்.
யானையை பின்புலமாக வைத்து இப்படம் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இதில் யானை பாகனாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இதற்காக இவர் தனது உடற்கட்டையும் மெருகேற்றி, யானையை பராமரிப்பது பற்றி உரிய பயிற்சி பெற்று நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. படத்தின் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக முதலில் அறிவித்தனர். ஆனால் அப்போது பல படங்கள் வெளியானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மே 23ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.