உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூலில் வெற்றி பெற்றதா டூரிஸ்ட் பேமிலி

வசூலில் வெற்றி பெற்றதா டூரிஸ்ட் பேமிலி

சசிகுமார், சிம்ரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கிய திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படமும் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை தேடி தந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் சுமார் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் இந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 5 கோடி வரை வசூலித்திருக்க கூடும் என்பதே விநியோகஸ்தர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !