சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை
ADDED : 199 days ago
சிம்பு நடிக்கும் 48வது படம் தக் லைப். ஜூன் 5ம் தேதி ரிலீஸ். அவர் நடிக்கும் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். டிராகன் படத்தின் மூலம் பலர் மனதை கொள்ளையடித்த கயாடு லோஹர் ஹீரோயின். இப்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், தன்னை வளர்த்துவிட்ட சிம்புவுக்காக இதில் காமெடியானக நடிக்கிறார். அதற்காக 12 கோடி சம்பளம் பெறுவதாக கேள்வி. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் பூஜை, நாளை(மே 3) நடக்கிறது என்பது புது தகவல். இதில் கல்லூரி மாணவராக சிம்பு வருகிறார். இந்தியாவில் உள்ள பல கல்லூரிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.