உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா?

டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா?

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி உள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படத்துக்கு நல்ல வரவேற்பு. படத்தின் தியேட்டர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அடுத்த வாரம் 300, 400 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்கியவர் 24வயதான அபிஷன் ஜீவிந்த் என்ற இளைஞர். இவர் எந்த இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாமல், சில குறும்படங்கள் மட்டுமே இயக்கிய அனுபவசாலி.

அபிஷன் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வளர்ந்தவர், தனியார் கல்லுாரியில் விஸ்காம் படித்துவிட்டு சினிமா இயக்குனர் ஆகியிருக்கிறார். சென்னையில் 10ம் வகுப்பு படித்தபோதே அகிலா என்ற சக தோழியிடம் நட்பாகி உள்ளார். இப்போது அவரை காதலித்து வருகிறார்.

அபிஷன் டைரக்டர் ஆக அகிலாவும் உறுதுணையாக இருந்ததால் 'டூரிஸ்ட் பேமிலி' பட டைட்டில் கார்டில், படம் தொடங்கும் முன்பு 'அகிலாவுக்கு நன்றி' கூறி, தனது பாசத்தை காண்பித்துள்ளார். 100 ஆண்டு தமிழ் சினிமாவில் இப்படி எந்த இயக்குனரும், காதலிக்கு நன்றி கூறியது இல்லை. சமீபத்தில் நடந்த டூரிஸ்ட் பேமிலி பட பிரமோஷன் நிகழ்வில், அக்டோபர் மாதம் 31ம் உன்னை திருமணம் செய்ய விருப்பம் என்று அபிஷன் மேடையில் சொன்னது வைரலானது. இப்போது படமும் வெற்றி பெற்றதால் திருமணம் உறுதி ஆகி விட்டது என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !