ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடக்கிறது. இந்நிலையில், சூர்யாவுடன் இணைவதாக இருந்த ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும்? என்று லோகேஷ் கனகராஜியிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரோலக்ஸ் படத்தை சூர்யாவை வைத்து கண்டிப்பாக இயக்குவேன். என்றாலும் அது எப்போது தொடங்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. கூலி படத்தை முடித்ததும் கார்த்தியுடன் கைதி 2 படத்தில் இணையப்போகிறேன் என்று கூறியுள்ளார் யோகேஷ். வாத்தியார், சர்தார் 2 படங்களை முடித்துவிட்ட கார்த்தி அடுத்து கைதி 2வில் நடிப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது.